(FASTNEWS|COLOMBO) வட மேல் மாகாணத்தில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வட மேல் மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்று(14) மூடப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டின் ஏனைய பாடசாலைகள் வழமை போன்று இயங்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.