இலங்கையில் தனியார் துறைமத்தியில் அதிகளவான பாலைக் கொள்வனவு செய்து வருகின்ற நெஸ்லே, பாலைக் கொள்வனவு செய்ததன் மூலமாக கிட்டத்தட்ட 20,000 உள்நாட்டுப் பாற்பண்ணையாளர்களுக்கு 3.6 பில்லியன் ரூபாதொகையைபங்களிப்பாக வழங்கியுள்ளது.
இவ்வாறு சேகரித்த பாலை நெஸ்பிறே,மைலோ மற்றும் மில்க்மெயிட் போன்ற தனது உற்பத்திகளை தயாரிக்க அது பயன்படுத்தி வருகின்றது.
இலங்கையின் பாலுற்பத்தித் தொழிற்துறை இன்னமும் வளர்ச்சிகண்டுவருகின்றஒருதுறையாகவேகாணப்படுகின்றது. பாற்பண்ணையாளர்கள் உற்பத்தி செய்கின்றபாலின் அளவு உள்நாட்டுச் சந்தையின் மொத்தகேள்வியைஈடுசெய்வதற்கு போதுமானதாக இல்லை.
இத்துறையை அபிவிருத்தி செய்ய உதவுவதற்காக 1980 களின் ஆரம்பத்திலிருந்தே குறித்த அதிகாரசபைகளுடன் இணைந்து நெஸ்லே பணியாற்றிவந்துள்ளது. பாலின் விநியோக அளவு மற்றும் தரத்தை அதிகரிப்பது மட்டுமன்றி,உள்நாட்டுப் பாற்பண்ணையாளர்களுக்கு நிலைபேற்றியலுடனான வாழ்வாதாரம் ஒன்றையும் கட்டியெழுப்ப உதவவேண்டும் என்ற நம்பிக்கையையும் நிறுவனம் கொண்டுள்ளது.
கிரமமான அடிப்படையில் பாற்பண்ணையாளர்களுக்கு பல்வேறுவகையான தொழில் நுட்ப தலைப்புக்கள் மற்றும் மிகச் சிறந்தநடைமுறைகள் தொடர்பில் பயிற்சிமற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை ஏற்பாடு செய்து வருகின்ற நிறுவனம் அதன் மூலமாக தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் மிகச் சிறந்தநடைமுறைகளைஅவர்களுடன் பகிர்ந்துவருகின்றது. கால்நடைகளுக்கு தீவனம் அளித்தல், இனப்பெருக்கம், கால்நடை சுகாதாரம் மற்றும் பாற்பண்ணையை நிர்வகித்தல் போன்ற விடயங்கள் இதில் அடங்கியுள்ளன.’
இலங்கையிலுள்ள பாற் பண்ணையாளர்கள் உயர் தரத்திலானபாலை இன்னும் அதிகமாக உற்பத்திசெய்வதற்கு உதவவேண்டும் என்பதில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் இதயபூர்வமாக செயற்பட்டு வந்துள்ளோம்’என்று நெஸ்லே லங்கா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான ஷவானிஹெக்டே அவர்கள் குறிப்பிட்டார்.
‘எமது வியாபார செயற்பாடுகள் அனைத்தும் உள்நாட்டு சமூகத்தின் மத்தியில் நல்விளைவுகளை ஏற்படுத்த வேண்டும் என்ற எமது சிந்தனையான’பகிரப்பட்ட அடிப்படையில் பெறுமதியைத் தோற்றுவித்தல்’ என்பதன் ஒரு அங்கமாக காணப்படுகின்றன. உள்நாட்டில் பெறப்படுகின்ற நலம் செறிந்த பாலை உபயோகித்து தயாரிக்கப்பட்ட உயர் தரம் வாய்ந்த உற்பத்திகளை இலங்கையிலுள்ள எமது நுகர்வோருக்கு வழங்கி, கிராமியப் பொருளாதாரத்திற்கு பங்களிப்பாற்ற வேண்டும் என்ற ஈடுபாட்டில் நாம் மிகவும் உறுதியாக உள்ளோம்.’
நிறுவனம் தற்போது வட-மாகாணத்தில் வட்டக்கச்சியில் புதியபால் குளிரூட்டல் நிலையமொன்றை ஆரம்பித்து வைத்துள்ளது.
இந்த குளிரூட்டல் நிலையத்தின் துணையுடன் பாற்பண்ணையாளர்கள் தங்களதுபாலை 4 பாகைசெல்சியஸ் வெப்பநிலையில் வைத்து,அதன் புதிய தன்மை கெட்டுப்போகாது பேண முடியும். இதற்குமுன்னர் இப்பிரதேசத்தில் பாலைசேகரித்து, அதனைபேணி வைப்பதற்கு போதுமான வசதிகள் காணப்பட்டிராத நிலையில், பாலின் தரம் பாதிக்கப்பட்டதுடன், அவற்றை வீணாககொண்ட வேண்டிய நிலையும் காணப்பட்டது.
வட்டக்கச்சியைச் சேர்ந்தஒருபாற்பண்ணையாளரானஅரியபுத்திரன் கிறிஷணசீலன் இந்த புதிய ஏற்பாட்டு வசதியானது,
நகரில் பாலுற்பத்தித் தொழிற்துறையை மீண்டும் கட்டியெழுப்ப உதவும் என்று தனது உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
(பர்சான்)