வட்டவடிவமாக பிளக்குகளுடன் கூடிய மின் உபகரணங்களுக்கு தடை..

 

பிளக்குகளுடன் கூடிய மின் உபகரணங்கள் மற்றும் பிளக் பொயின்டுகளை பயன்படுத்துவதில் தரக்கட்டுப்பாடு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, குறிப்பிட்ட வகை தரத்தை விட குறைவான பிளக்குகளுடன் கூடிய மின் உபகரணங்கள் மற்றும் பிளக் பொயின்டுகளை இலங்கைக்கு கொண்டு வருவதோ விற்பனை செய்வதோ தடை செய்யப்படவுள்ளதாக, மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய ஜி பிளக்குகள் (G plug) என அழைக்கப்படும் வகையான பிளக்குகளே தேசிய தரம் வாய்ததாக கொள்ளப்படும்.

இதேவேளை, வட்டவடிவமாக பிளக்குகளுடன் கூடிய (round pin plug) மின் உபகரணங்கள் பயன்படுத்துவதோ, விற்பனை செய்யப்படுவதோ தடை செய்யப்படவுள்ளன.

மின் உபகரணங்களைப் பயன்படுத்தும் போது, மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு  மேலும் தெரிவித்துள்ளது.

2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது