2016 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட யோசனைகளுக்கு அமைவாக பல்கலைக்கழக மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் அடிப்படையில் மடிக்கணனிகளை வழங்குவதற்கு உயர் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்பிரகாரம் 3 வருடங்களுக்கு இந்த கடன் வழங்கப்படவுள்ளதாக உயர் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் பி.ஜீ ஜயசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நடவடிக்கைகள் இன்னும் 2 வாரங்களுக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இதற்கான 2 வங்கிகளை தெரிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள வங்கிக் கிளைகளூடாகவே இந்த கடன்கள் வழங்கப்படவுள்ளதாகவும் உயர் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் பி.ஜீ ஜயசிங்க தெரிவித்துள்ளார்.