மதிப்பீட்டுக் கூட்டு வரி அதிகரிக்கப்பட்டாலும், அதனை கைபேசி உட்பட தொலைத்தொடர்பு உபயோகிப்பாளர்களை பாதிக்காத வகையில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
வட் வரி அதிகரிக்கப்பட்டதற்கு தான் உடன்படவில்லை என்றாலும், அது காலத்தின் தேவைக்கேற்ப நிதி அமைச்சு எடுத்த தீர்மானம் எனவும் அவர் கூறினார்.
உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் தொலைபேசி கட்டணங்கள் குறைவாகவே உள்ளன என அவர் கூறுகிறார்.
இது தற்காலிக அதிகரிப்பு என்று கூறிய அவர், இந்த வரிச் சுமையை சமாளிக்க புதிய தொழில்நுட்ப வசதிகள் மூலம் மக்களுக்கு மேம்பட்ட சேவையை அளிக்க முடியும் என நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.