வட மத்திய மாகாண சபையின் அனைத்து வாயில்களையும் மறித்து போராட்டம்..

வட மத்திய மாகாண சபைக்கு முன்னால் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக, அப்பகுதியில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மாகாண சபை வாயில்கள் அனைத்தையும், மறித்து வேலையில்லாப் பட்டதாரிகள் குறித்த இந்தப் போராட்டத்தினை மேற்கொண்டு வருவதாக, தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், எவரும் மாகாண சபைக்குள் இருந்து வௌியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிய வந்துள்ளது.

 

(rizmira)