வட மாகாண சபையின் அரசியலமைப்புக்கான யோசனை மத்திய அரசாங்கத்திடம் கையளிப்பு

இலங்கையின் அரசியல் அமைப்பு தொடர்பில் வடமாகாண சபையினால் நேற்று (22) நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புக்கான யோசனை மத்திய அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரிடம் இந்த யோசனை கையளிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

வடமாகாணசபையின் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம் இதனை தெரிவித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகின்றது.

புதிய அரசியல் அமைப்பு குறித்து வடமாகாணசபையில் முன்வைக்கப்பட்ட யோசனை பல திருத்தங்களுடன் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது

எனினும், வடக்கு மாகாணசபையின் குறித்த இந்த யோசனையை கொழும்பை மையமாகக்கொண்ட சிங்கள கட்சிகளின் விமர்சனத்துக்கு ஏற்கனவே உள்ளாகியுள்ளன

வடக்கு, கிழக்கு இணைந்த மாநில முறை மற்றும் முஸ்லிம், இந்திய வம்சாவளிகளுக்கான தனி அலகுகள் போன்ற சர்ச்சைக்குரிய திட்டங்கள் இந்த யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ளமையும்
குறிப்பிடத்தக்கது.