‘காஜா’ காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை…

நாட்டின் வடக்கு பிரதேசத்தில் காணப்படுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக இன்றைய தினம்(16) வட மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

‘காஜா’ சூறாவளி காரணமாகவே குறித்த பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.