வடமேல் மாகாண அனைத்து அரச நிறுவனங்களுக்கு இன்று(14) விடுமுறை…

(FASTNEWS|COLOMBO) – வடமேல் மாகாணத்திலுள்ள அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இன்று(14) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. 

பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, வடமேல் மாகாண ஆளுநர் பேஷல ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வடமேல் மாகாணத்தில் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து அரச நிகழ்வுகளும் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக வட மேல் மாகாண ஆளுநர் பேசல ஜயரத்ன தெரிவித்துள்ளார்.