“வட மேல் மாகாண வாவி செயற்றிட்டம்” இன்று(13) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
வடமேல் மாகாண பொதுமக்களின் நீண்டகால பிரச்சினையாக இருந்த குடிநீர் பற்றாக்குறையை நிவர்த்திக்கும் முகமாக நீரை விநியோகிக்கும் பாரிய செயற்றிட்டம் ஜனாதிபதியின் பங்களிப்புடம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மீ ‘ஓயாவின் உயர்ந்த நீரேந்து பிரதேசங்கள் மற்றும் ஹக்வடுனா ஓய நீர்த்தேக்கத்திற்கு மஹாவலி கங்கையின் நீரை திருப்பி குருணாகலை மாவட்டத்தின் வடக்கு பிரதேசத்தில் உள்ள சில வாவிகளை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இதனூடாக விவசாயத்தை மேம்படுத்துவதற்கும், நீர் பற்றாக்குறையினால் ஏற்படும் நெருக்கடியை கட்டுப்படுத்துவதற்கும், வடமேல் மாகாண வாவி செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
செயற்றிட்டம் நிறைவடைந்த பின்னர் மஹாவலியின் நீரை ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ஏக்கர் நிலப்பரப்பிற்கு பெற்றுக்கொடுப்பதற்கு வாய்ப்பு ஏற்படும் என தெரிவி்க்கப்பட்டுள்ளது.
பிரதேசத்தில் உள்ள 300 சிறிய குளங்களுக்கும் 8 பிரதான வாவிகளுக்கும் மஹாவலியின் நீரை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.