வத்தளையில் நபரொருவர் வெட்டிகொலை

வத்தளை பிரதேசத்தில் இன்று அதிகாலை ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பிறிதொரு நபருடன் சென்று கொண்டிருந்த வேளையிலேயே குறித்த நபர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நான்கு பேரால் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்டே இவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

(riz)