வத்தளை , மாபோல பிரதேசத்தில் இன்று(16) முற்பகல் 7 மணியளவில் மதுபான விற்பனை நிலையமொன்றில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தீயினால் குறித்த மதுபான விற்பனை நிலையம் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்த வெலிசர கடற்படையின் தீயணைப்பு பிரிவினர் தீயிணை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது.