இந்த வருட எசல பெரஹெராவிற்கு வளர்ப்பு யானைகள் 15 தொடக்கம் 20 வரை பற்றாகுறையாகவுள்ளதாக கண்டி தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த பெரஹெரவில் 70 யானைகள் கலந்து கொள்ளவுள்ளதாக நேற்று தலதா மாளிகையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட கதிர்காமம் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே கெமுனு வலியசுந்தர, வனவிலங்கு அமைச்சர், கமினி ஜயவிக்கிர பெரேராவிற்கு “எசல பெரஹெராவிற்கு முடிந்தால் 5 யானைகள் தேடித் தாருங்கள்” என சவால் விடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.