வயிறு கலங்க மைதானத்தை விட்டு வெளியேறிய ஆஸி வீரர்…

புனேவில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய வீரர் ரென்சா பாதியில் மைதானத்தை விட்டு வெளியேறிய சம்பவம் சற்று நேரம் மைதானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தியா- அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது.

அதில் இந்தியா வீரர் யாதவ் 15 வது ஓவரில் நோ பால் வீசி வார்னருக்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார்.

ஆனால் அவர் சிறிது நேரம் கூட தாக்குபிடிக்க முடியாமல் 38 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவர் பெளலியன் திரும்பிக் கொண்டிருந்த போது, அவரைத் தொடர்ந்து மற்றொரு துவக்க வீரராக களமிறங்கிய ரென்சாவும் சென்றார்.

இதனால் அடுத்த விக்கெட்டிற்கு களமிறங்குவதற்காக அவுஸ்திரேலியா வீரர் ஸ்மித் மைதானத்திற்குள் வந்து கொண்டிருந்த போது, ரென்சா பெளலியன் திரும்பியது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதன் பின்பு ரென்சா வயிற்றில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே மைதானத்தை விட்டு வெளியேறிதாக கூறப்படுகிறது.

மேலும் புனேயில் அதிகபட்சம் 36 டிகிரி வெயில் அடித்ததுள்ளது. இதனால் இந்த வெயிலை தாங்க முடியாமல் ரென்சாவுக்கு வயிற்றில் கலக்கம் ஏற்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. மதியம் உணவு இடைவேளைக்கு பிறகும், ரென்ஷா மைதானத்தில் இறங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக ரசிகர்கள் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் ரென்சா உறுதியாக வயிற்று பிரச்சினை காரணமாகவே மைதானத்தை விட்டு வெளியேறி உள்ளார் என்று புகைபடத்துடன் வெளியிட்டு வருகின்றனர்.