“..வயிறு பெரிதாக உள்ளதால் பிடி தவறப்பட்டதாம்.. ” – மாலிங்க ஆவேசம்..

சாம்பியன்ஸ் கிண்ண தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இலங்கை தொடர்ந்தும் பிடிகளை தவற விட்டமை குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர வீரர்களை குறி வைத்து கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

இது குறித்து இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க கருத்துத் தெரிவிக்கையில்;

“.. களத்தெடுப்பில் எந்தவொரு வீரரினதும் கவனம் எப்போதும் பிடிகளை நோக்கியே இருக்கும்.. கதிரைகளில் இருந்து கிரிக்கெட் போட்டிகளை ரசிப்போருக்கு பிடிகள் என்பது சர்வசாதாரணம் தான்.. அதனை பிடிப்பதில் உள்ள சிரமம் வீரர்களுக்கு மட்டும் தான் தெரியும்… சில தலைமைகள் கதிரைகளை சூடாக்கியவாறு பிடிகளை தவறவிட்டமைக்கு காரணங்கள் தேடுகின்றனர். வயிறு பெரிதாக உள்ளதால் பிடி தவறப்பட்டதாம்.. இன்னும் நிறையே.. நாம் இந்தியாவினை வெற்றி கொண்டோம், அதன் போது வீரர்களை புகழ்ந்து தள்ளினர்.. பிடிகள் தவறவிட்டதால் இப்போது சள்ளடையர்களாக எண்ணுகின்றனர்.. “

“.. எம்மை இராணுவ முகாங்களில் பயிற்சிக்கு அனுப்ப எந்தத் தேவையும் எங்களுக்குள்ள வளங்களை அதிகப்படுத்தினாலே போதுமாகும். நான் இவ்வாறு கருத்துத் தெரிவித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து விமர்சனங்கள் எழலாம்.. அவற்றுக்கு ஒன்றும் நான் சளைத்தவனல்ல..” என லசித் மாலிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=bv_fUpN8ce0&t=37s” width=”560″ height=”315″]

 

(rizmira)