வரட்சியினால் நீர் மின் உற்பத்தியில் வீழ்ச்சி..

தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் நீர் மின் உற்பத்தி இந்த வருடம் 80 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக மின் சக்தி மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுரேன் பட்டகொட தெரிவித்துள்ளார்.

நீர்த்தேக்கங்களில் 40% நீர் மட்டம் காணப்படுவதாகவும், நீர் மின் உற்பத்தி நிலையங்கள் காணப்படும் பகுதிகளிலுள்ள நீரேந்துப் பகுதிகளில் நீர் வற்றிப் போயுள்ளமையே மின் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டமைக்கு பிரதான காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் நுகர்வோருக்கு தேவையான அளவு மின்சார விநியோகத்தை மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் மின் சக்தி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் நிலவும் கடும் வரட்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.