அரசாங்கத்தின் வட் வரி அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவியரீதியில் பல நகரங்களில் ஹர்த்தால் செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் குறித்த வரி அதிகரிப்புக்கு எதிராக இன்று இரத்தினபுரி வர்த்தகர்களும் ஒன்று திரண்டு வர்த்தக நிலையங்களை மூடி ஹர்த்தாலில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன், இரத்தினபுரி நகரில் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலானது வரலாற்றில் இதுவே முதற்தடவை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று முன்னெடுக்கப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு தனியார் கடைகள் வங்கிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அரச வங்கிகளும் அரச நிறுவனங்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் மக்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.