2017ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று(20) நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று முற்பகல் 10.30க்கு நாடாளுமன்றம் ஒன்று கூடுகிறது.
இதன்போது நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் குறித்த இந்த சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 10ம் திகதி முன்வைக்கப்படவுள்ளது.
அதன் இறுதி விவாதம் டிசம்பர் மாதம் 10ம் திகதி நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.