வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதம் இன்று..!- இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 9..

2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் இன்று(10) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதன்படி, இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் இன்று(10) முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை நடைபெற்று இறுதித் தினத்தன்று மாலை அதற்கான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

மேலும், எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் டிசம்பர் 09 ஆம் திகதி வரையில் வரவு செலவுத் திட்ட குழு முறையிலான விவாதம் நடைபெறும். 9 ஆம் திகதி மாலையில் இறுதி வாக்கெடுப்பு இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

####