வரவு – செலவுத் திட்டம் மீதான விவாதத்திற்கு முன்னர் ராஜிதவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கு..

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன­வுக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ர­ணையை எதிர்­வ­ரும் 9ஆம் திக­திக்கு முன்­னர் விவாதத்­துக்கு எடுத்­துக் கொள்ள வேண்­டும் என கூட்டு எதிர்க்கட்சி வலியுறுத்தியுள்ளது.

நாடா­ளு­மன்­றம் நேற்­று(18) சபா­நா­ய­கர் கரு ஜய­சூ­ரிய தலை­மை­யில் கூடி­யது. இதன்போது கூட்டு எதிர்க்கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மகிந்­தா­னந்த அளுத்­கமகே ஒழுங்­குப் பிரச்­சி­னையை எழுப்­பி­னார்.

‘சுகா­தார அமைச்­ச­ருக்கு எதி­ராக எமது அணி­யின் கையெ­ழுத்­துக்­க­ளு­டன் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ர­ணையை விவா­திக்­கும் திகதி இன்­னும் அறி­விக்­கப்­ப­ட­வில்லை. அது எப்­போது விவா­திக்­கப்­ப­டும்’ என்று கேள்வி எழுப்­பி­னார்.

நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ரணை தொடர்­பில் கட்­சித் தலை ­வர்­கள் கூட்­டத்­தில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் தினேஸ் குண­ வர்­தன கேள்வி எழுப்­பி­யதற்கு, இந்த விட­யம் தொடர்­பில் வழக்கு இருக்­கின்­றது. உரிய வகை­யில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்­கப்­ப­டும்’ என்று இதற்­குச் சபா­நா­ய­கர் பதி­ல­ளித்­தார்.

குறுக்­கிட்ட மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யின் தலை­வர் அநு­ர­கு­மார திசாநாயக்க, “..நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கைய­ளிக்­கப்­பட்­ட­தன் பின்­னர், நிலை­யி­யற் கட்­டளை மற்­றும் சட்­டமா அதி­ப­ரின் ஆலோ­சனை உள்­ளிட்ட விடயங்­க­ளுக்கு அமை­வாக தேவை­யான திருத்­தங்­கள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தன் பின்­னரே அது நாடா­ளு­மன்ற ஒழுங்­குப் பத்­தி­ரத்­தில் சேர்க்­கப்­ப­ட­வேண்­டும்.

ஒழுங்­குப் பத்­தி­ரத்­தில் சேர்க்­கப்­பட்­ட­தன் பின்­னர் விவா­தத் துக்கு எடுக்க முடியாது என்று கூறு­வ­தில் எந்­தத் தர்க்­க­மும் கிடை­யாது. வரவு – செல­வுத்­ திட்டம் மீதான விவா­த­மும் நவம்­பர் 9ஆம் திகதி முதல் நடை­பெ­ற­வுள்­ளது.

அதற்கு முன்­னர் நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ர­ணையை விவா­தத்­துக்கு எடுத்­துக்­கொள்­ளா­விட்­டால் ஜன­வரி மாதம் ­வரை கால­தா­ம­தம் ஏற்­ப­டும். இது தொடர்­பில் விரைந்து முடி­வொன்றை எடுக்க வேண்­டும். இல்­லா­விட்­டால், சபா­நா­ய­கர் இந்த சபைக்­கு­ரிய பொறுப்பைத் தவ­ற­விட்­ட­தா­கி­வி­டும்’ என்­றும் அநு­ர­கு­மார சுட்­டிக்­காட்­டி­னார்.

இது தொடர்­பில் ஆராய்ந்து விரை­வில் தீர்­மா­னம் எடுக்­கப்­ப­டும் என்று சபாநாய­கர் தெரி­வித்­தார்.

 

(rizmira)