(FASTNEWS|COLOMBO) வரவு செலவு திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு தொடர்பில் தீர்மானிப்பது குறித்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நாளை(02) இடம்பெறவுள்ளது.
இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொள்ளுமாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.