வரி அறவீடு செய்யும் அதிகாரம் மாகாண சபைக்கு கிடையாது எனவும், அரசியல் அமைப்பின் 148ஆம் சரத்தின் அடிப்படையில் வரி அறவீடு செய்யும் பூரண அதிகாரம் நாடாளுமன்றிற்கு மட்டுமே காணப்படுகின்றதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
பொரளையில் நேற்று(11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றின் அனுமதியின்றி ஏதேனும் ஓர் நிறுவனம் வரி அறவீடு செய்ய முயற்சித்தால் அது சட்டவிரோதமான செயலாகும். மாகாண சபைகளுக்கும் நகர சபைகளுக்கும் நாடாளுமன்றினால் வழங்கப்பட்ட அதிகாரங்களே காணப்படுகின்றன.
பொதுமக்கள் மீது அழுத்தங்களை பிரயோகித்து டெங்குவை ஒழிக்க முடியாது எனவும் இதனை எதிர்ப்பதாகவும் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், அபிவிருத்தி செய்யப்படாத, கவனிப்பாரற்று கிடக்கும் மேல் மாகாண காணிகளுக்கு அதன் மொத்த பெறுமதியில் 2% வரி அறவீடு செய்யும் மேல் மாகாண சபையின் யோசனைக்கு அவர் இவ்வாறு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.