இரத்தினபுரி கொலன்ன, புளதொட சந்தியில் உள்ள ஆடை வர்த்தக நிலையமொன்றில் நேற்றிரவு(06) திடீர் தீ விபத்துடன் வெடிப்பு சம்பவம் ஒன்றும் இடம்பெற்றள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
தீவிபத்தினால் ஆடை வியாபார நிலையத்தின் உரிமையாளர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த வெடிப்பு சம்பவத்தால் ஆடை வியாபார நிலையத்திற்கு அருகில் இருந்த பேருந்து ஒன்றிற்கும் முச்சக்கரவண்டி ஒன்றிற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் கொலன்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.