வறட்சியான சருமம் ஏற்படுவதைத் தவிர்க்க சில வழிகள்…

வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு, மூக்கு மற்றும் வாயைச் சுற்றி வறட்சி ஏற்பட்டு, தோல் உரிய ஆரம்பிக்கும்.

அதுமட்டுமின்றி, இந்த வகை சருமத்தினருக்கு பொடுகுத் தொல்லை, சுவாசக் கோளாறு, வயிற்றுப் பிரச்சனைகள் போன்றவை இருக்கும்.

இப்போது மூக்கைச் சுற்றி வறட்சி ஏற்படுவதைத் தவிர்க்க சில வழிகளைப் பற்றி பார்ப்போம்.

* மூக்கைச் சுற்றி வரும் வறட்சியை நீக்க, பெட்ரோலியம் ஜெல்லியை தடவ வேண்டும். தினமும் இரவில் படுக்கும் முன், தடவி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

* தினமும் குடிக்கும் தண்ணீரின் அளவை அதிகரிக்க வேண்டும்.

* வறட்சியான சருமம் உள்ளவர்கள், பாதாம் எண்ணெயை கற்றாழை ஜெல்லுடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், வறட்சி நீங்கும்.

* அழுக்குகள் வளைவுகள் உள்ள இடங்களில் தங்கி, சருமம் மோசடையச் செய்யும். எனவே எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரையை ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து கழுவ வேண்டும். மேலும் இந்த செயலை வாரம் 2 முறை செய்து வர வேண்டும்.

* பால், தயிர் மற்றும் வெள்ளரிக்காய் கொண்டு மாஸ்க் தயாரித்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் ஈரப்பசை தக்க வைக்கலாம்.

* முட்டையின் மஞ்சள் கருவுடன், சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து, அதனை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இதன் மூலமும் வறட்சியைத் தடுக்கலாம்.