வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..

நாட்டில் நிலவிவரும் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை 18 இலட்சத்தை தாண்டியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிிவத்துள்ளது.

இதேவேளை மொனராகலை மாவட்டத்தில் 3 91,468 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. குருநாகலை மாவட்டத்தில் வறட்சி காரணமாக 2 ,56 000 அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம் மாவட்டத்தில் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 218006 ஆக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது..

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்தார்.