வறட்சி காரணமாக 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு…

நாட்டின் பல மாவட்டங்களில் வறட்சி காரணமாக இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக குருணாகல் புத்தளம், மன்னார், அநுராதபுரம் மற்றும் பொலனறுவை மாவட்டங்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்போது நிலவும் வறட்சி காலநிலை காரணமாக நீர்மின் உற்பத்திக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் மீள்புத்தாக்கல் அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் நாளொன்றுக்கான மின் நுகர்வானது மணித்தியாலயத்திற்கு 43 ஜிகாவோட்ஸாக அதிகரித்துச் சென்றுள்ளதாக அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜெயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வறட்சிப் பாதிப்புக்கள் இருக்குமாயின் 117 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.