மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தினைப் போன்றல்லாது, குறைந்த வருமானம் ஈட்டுவோர் மீது வரிச்சுமை திணிக்கப்படாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் அமைச்சர்களை சந்தித்த போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்…
பெறுமதி சேர் வரி மற்றும் தேசத்தை கட்டியெழுப்பும் வரி சில துறைகளில் விதிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் பெற்றுக்கொண்ட மிகக் கூடிய கடன்கள் காரணமாகவே இவ்வாறு கடன் பெற்றுக்கொள்ள நேரிட்டுள்ளது.
எனினும் மஹிந்த ராஜபக்ஷ அட்சிக் காலத்தைப் போன்று குறைந்த வருமானம் ஈட்டுவோரை வரிச்சுமையில் ஆழ்த்தும் திட்டம் எம்மிடம் இல்லை.
ராஜபக்ஷ அரசாங்கம் செல்வந்தர்கள் சிலருக்கு மட்டும் வரிச் சலுவை வழங்கியது.
தேசிய அரசாங்கத்தின் வரிக் கொள்கை வறியவர்களை பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.