வற் வரி திருத்தம் மேற்கொள்வதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேலுமொரு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த பிரேரணைக்கு பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை வாக்குகள் மூலம் மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அனுமதி பெறவேண்டுமென தெரிவித்து உத்தரவு பிறப்பிக்குமாறு கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணி பி.லியனாராச்சி என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில் பிரதிவாதியாக சட்டமா அதிபர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
குறித்த வற் வரி திருத்த பிரேரணை அரசியலமைப்புக்கு முரணானது என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது