வற் வரிக்கு எதிராக நாளை நாடுதழுவிய ஹர்த்தாலுக்கு அழைப்பு – வர்த்தக சங்கங்கள்

மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் மீது அரசாங்கம் விதித்துள்ள வற் வரிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நாளை (09) முதல் நாடு தழுவிய ரீதியில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள  தீர்மானித்துள்ளதாக வர்த்தக சங்கங்கள் தெரிவித்துள்ளன.

வர்த்தக சங்கங்களில் பதிவு செய்துள்ள சகல கடை உரிமையாளர்களும் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்துகொள்ளவுள்ளன. கடைகளை மூடி பாதையில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாகவும் அச்சங்கம் அறிவித்துள்ளது.

அரசாங்கம் கொண்டு வரவுள்ள வற் வரி சீர்திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவு வழங்க வேண்டாம் என சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும் எழுத்து மூலம் கேட்டுக் கொள்ளவுள்ளதாகவும் அச்சங்கங்கள் அறிவித்துள்ளன.

ஜனாதிபதி வர்த்தக சங்கங்களுக்கு வழங்கிய எந்தவொரு வாக்குறுதியையும் பொருட்படுத்தாது, எந்தவித அறிவித்தலும் இன்றி நிதி அமைச்சர் இந்த வரிச் சீர்திருத்தத்தை 11 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார். இதற்கு வர்த்தக சங்கம் நாடு தழுவிய எதிர்ப்பை முதல் தடவையாக முன்னெடுக்கவுள்ளதாகவும் அச்சங்கங்கள் கூறியுள்ளன.