வற் வரி திருத்தம் தொடர்பிலான சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டால் வழக்குத் தொடரப்படும் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியினால் பொரளையில் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
நாடாளுமன்றில் உத்தேச சட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் வழக்குத் தாக்கல் செய்யப்படும்.
நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்ட 8 நாட்களுக்குள் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட முடியும்.
வழக்குத் தொடர்ந்து சட்ட ரீதியில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
விமல் வீரவன்ச நீதிமன்றின் உதவியை நாடியிருக்காவிட்டால் அதிகளவு வரிச் சுமையினால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
வற் வரி குறித்த திருத்தச் சட்டம் எதிர்வரும் 20ம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.