வற் வரி திருத்த சட்டமூலம் அரசியலமைப்பிற்கு உட்பட்டது – உயர்நீதிமன்றம் அறிவிப்பு..

வற் வரி திருத்த சட்டமூலம் அரசியலமைப்பிற்கு உட்பட்டது என உயர்நீதிமன்றம் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

உயர்நீதிமன்ற தீர்மானத்தை பிரதி சபாநாயகர் இன்று(25) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

வற் வரி திருத்த சட்டமூலத்திற்கு சவால் விடும் வகையில் உயர்நீதிமன்றத்தில் நான்கு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அதன் தீர்மானமே சபாநாயகருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கூட்டு எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில , பந்துல குணவர்தன மற்றும் சிசிர ஜயகொடி போன்று மேலுமொரு சட்டத்தரணியாலும் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.