(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நுவரெலியா – வலப்பனை – மலப்பத்தாவ பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் காணாமல் போயிருந்த 17 வயதான வாலிபனின் உடலை தேடும் பணிகள் இன்றும்(02) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை சீரான வானிலை நிலவுவதன் காரணமாக வலப்பனை பொலிசார் மற்றும் இராணுவத்தினரும் இணைந்து மேற்படி தேடுதல் பணியை ஆரம்பித்துள்ளதாக வலப்பனை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 30ம் திகதி இரவு வலப்பனை – மலபத்தாவ பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் அந்த வீட்டிலிருந்த தந்தை, தாய், மற்றும் மகள் ஆகியோர் காணாமல் போயிருந்த நிலையில் நேற்று(01) தேடும் பணிகள் இடம்பெற்றதுடன் குறித்த மூன்று பேரும் சடலமாக மீட்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.