ஏர்டெல் நிறுவனம் அடுத்த 3 ஆண்டுகளில் 60 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. தொலைத் தொடர்பு தகவல் பரிமாற்ற சேவைகளை மேம்படுத்த இந்த முதலீடுகளை மேற்கொள்கிறது. இதற்கு ‘புராஜெக்ட் லீப்’ என பெயரிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த தகவல்களை நேற்றையதினம் ஏர்டெல் நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்காசிய பிரிவு நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான கோபால் விட்டல் கூறியுள்ளார்.
இந்த திட்டத்தின் நோக்கம் தங்களது வலையமைப்பினை விரிவுபடுத்துவது மற்றும் தகவல் தொடர்பில் வாடிக்கையாளர்களுக்கு உயர்தரமான சேவை வழங்குவதும் தான் என்று ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2016 மார்ச் மாதமளவில்; 60 சதவீத ஏர்டெல் வலையமைப்புக்களை மொபைல் பிராட்பேண்ட் (mobile broadband) சேவைக்குள் கொண்டுவருவது திட்டத்தின் ஒரு பகுதி என்று கூறியுள்ளது.
இவர்களுக்கான தனித்தன்மையான வாடிக்கையாளர் சேவை வழங்குவதற்கும், எதிர்கால வலையமைப்பினை கட்டமைக்கும் முயற்சியாகவும் இருக்கும் என்று நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான கோபால் விட்டல் கூறியுள்ளார்.