வல்லப்பட்டை தொகையுடன் 04 இலங்கையர்கள் கட்டுநாயக்கவில் கைது..

சட்டவிரோதமான முறையில் வல்லப்பட்டை கடத்த முற்பட்ட நான்கு இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமான நிலைய சுங்க பிரிவினரால் நேற்று(04) கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் 116Kg வல்லப்பட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றின் பெறுமதி 12 மில்லியன் ரூபா எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், குறித்த வல்லப்பட்டைகள் நேற்று(04) இரவு 9.35 மணியளவில் டுபாய்க்கு கடத்த தயாராகவிருந்த நிலையிலேயே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

 

(rizmira)