(FASTNEWS| COLOMBO)- வணிக மேல் நீதிமன்றங்களில் வழக்குத் தொடருவதற்கான குறைந்தபட்ச பணப் பெறுமதி 05 மில்லியன் ரூபாவில் இருந்து 20 மில்லியன் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல், நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த புதிய நடைமுறை கட்டளையானது, எதிர்வரும் 15ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும், இதற்கு முன்னதாக வணிக மேல்நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளுக்கு இந்த நடைமுறை தாக்கம் செலுத்தாது என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.