வழக்கு விசாரணை மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதி !

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது காலில் ஏற்பட்டுள்ள காயம் ஒன்று காரணமாக அவருக்கு சந்திர சிகிற்சை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்ற போது அவரது காலில் ஏற்பட்டிருந்த காயம் ஒன்றில் ஏற்பட்ட கிருமி தொற்று காரணமாக அவருக்கு காலில் சத்திர சிகிற்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் வரும் வாரம் அவருக்கு எதிராக ஹோமாகமை நீதிமன்றில் வழக்கு விசாரணை மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் அவர் சத்திர சிகிற்ச்சைக்கு உற்படுத்தடுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.