ஒரு ரோபோ என்பது நடைமுறையில் உண்மையான இயந்திர வடிவுடையது . மேலும் அது கணினி வழிகாட்டுதல் மற்றும் மின்சுற்றுக்களின் மூலம் இயங்கும் திறன் படைத்த இயந்திரம் ஆகும்.
அவ்வாறு இங்கு விமான நிலையத்தில் வழி தெரியாமல் தவிக்கும் பயணிகளுக்கு உதவும் ரோபோ தயாரிக்கப்பட்டுள்ளது. “ரோபோ” எனப்படும் எந்திர மனிதனின் சேவை பல துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, மிகவும் பிசியான விமான நிலையங்களில் வழிதெரியாமல் தவிக்கும் பயணிகளுக்கு வழி காட்ட உதவும் ‘ரோபோ’க்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்த ‘ரோபோ’வை இங்கிலாந்து நிபுணர்கள் உருவாக்கியுள்ளனர்.‘ரோபோ’ விமான நிலையத்தில் வழி தெரியாமல் தவிக்கும் பயணியிடம் சென்று அவர்களை ஒரு வாசலில் இருந்து மற்றொரு வாசலுக்கு அழைத்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ‘ரோபோ’ பரிசோதனை இங்கிலாந்தின் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் கடந்த ஒரு வாரமாக நடத்தப்பட்டது. வருகிற மார்ச் மாதம் இறுதியாக பரிசோதனை நடத்தப்பட உள்ளது.