நாட்டின் இன ஒற்றுமைக்கும், சமாதானத்திற்கும் பங்கம் ஏற்படுத்தி மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதற்கு இடமளிக்க வேண்டாம். நாம் அமைதியாக வாழ விரும்புக்கிறோம் மட்டக்களப்பு வவுணதீவில் இரு பொலிஸாரை சுட்டு கொலை செய்தமையை வன்மையாக கண்டித்து திருக்கோவில் பிரதேசத்தில் இன்று( 03) ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது
குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது திருக்கோவில் பிரதேச சமாதானத்தை விரும்பும் மக்கள் வணிகம் எனும் அமைப்பினால் திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக கண்டன ஆர்பாட்டத்தினை முன்னெடுத்ததுடன் அங்கிருந்து மோட்டார் சைக்கில்களில் இளைஞர்கள் பேரணியாக தம்பிலுவில் வரை சென்று தமது எதிர்ப்பினை காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.