வவுனியா பழைய பஸ் நிலையம் மூடப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக வவுனியா வர்த்தக சங்கம் இன்றும்(03) வியாபார நிலையங்களை மூடி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பஸ் நிலையம் மூடப்பட்டதனால் பொது மக்கள் அப்பகுதிக்கு வருவதில்லை என்றும், இதனால் வியாபார நிலையங்களை மூடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வவுனியா வர்த்தக சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
வுனியா பழைய பஸ் நிலையம் மூடப்பட்டதை எதிர்க்கும் நோக்கில் அப்பகுதி வர்த்தகர்கள் கடந்த 01ம் திகதி முதல் கறுப்புக் கொடி ஏற்றி வர்த்தக நிலையங்களை மூடி எதிர்ப்பை வௌிப்படுத்தி வருகின்றனர்.
இதேவேளை இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய தொழிற்சங்க ஊழியர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தையடுத்து போக்குவரத்துச்சபை தலைமைக் காரியலாயத்திலிருந்து விசேட குழுவொன்று வடக்கிற்கு இன்று விஜயம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.