வவுனியா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவு திறந்துவைப்பு

(FASTNEWS|COLOMBO) – வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்படுள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை மக்கள் பயன்பாட்டிற்காக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று கையளித்தார்.

இரண்டாவது சுகாதாரத்துறை மேம்பாட்டு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இவை அமைக்கப்பட்டுள்ளதுடன், இருதய மற்றும் சிறுநீரக சிகிச்சை பிரிவுக்கான அடிக்கலையும் பிரதமர் நாட்டி வைத்தார்.

இருதய மற்றும் சிறுநீரக சிகிச்சை பிரிவு, நெதர்லாந்து அரசாங்கத்தின் இலகு கடன் உதவியில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்நிகழ்வில் சுகாதார, போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன, கைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள், நீண்ட காலமாக இடம்பெயர்ந்தோரை மீள் குடியமர்த்துதல், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிவமோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், நெதர்லாந்து நாட்டின் துணைத் தூதுவர் ஈவா வான் வுர்சம், வட மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்தியர் சத்தியலிங்கம், தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரம், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் வீ. சிவஞானசோதி, பிரதமரின் செயலாளர் சமன் ஏகநாயக்க மற்றும் பல அரசாங்க அதிகாரிகள், அரசியல்வாதிகள், வைத்திய அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்..