வஸீம் கொலை – அழைப்பாணை கையளிக்க தாமதித்ததினால் வழக்கு ஒத்திவைப்பு.

பிரபல றகர் வீரரான வஸீம் தாஜூதீனின், மரண விசாரணைகளை மேற்கொண்ட கொழும்பு, நீதிமன்ற முன்னாள் வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவை கைது செய்யாமல் இருக்குமாறு கட்டளையிடக்கோரி, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணை செப்டெம்பர் மாதம் 01ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமான அழைப்பாணை, இரகசிய பொலிஸாரிடம் கையளிப்பதில் தாமதம் ஏற்பட்டமையால், வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டதாக மேலதிக நீதவான் துலானி அமரசிங்க மேலும் தெரிவித்தார்.