வஸீம் கொலை விவகாரம் – சந்தேக நபர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

றக்பி வீரர் வஸீம் தஜூடினின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்யுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நீதிமன்றம் இன்று(25) உத்தரவிட்டுள்ளது.

மேலும், றக்பி வீரர் வஸீம் தாஜுடீனின் மரணமானது கொலையாயிருக்க வேண்டுமென நம்பப்படுவதாக கொழும்பு மேலதிக நீதிவான் நிஷாந்த பீரிஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தாஜுதீன் மரணம் குறித்த பரிசோதனை அறிக்கைகள் 6இனை முன்வைத்தே நீதிவான் குறித்த தீர்மானத்தினை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.