றகர் வீரர் வஸீம் தாஜுடீனின் கொலை தொடர்பிலான விசாரணைகள் விரைவாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய கோணத்தில் இடம்பெறும் விசாரணைகளுக்கு அமைய விரைவில் மூவர் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த இந்த கொலை தொடர்பில் தெளிவான பல சாட்சியங்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
அதற்கமைய குறித்த 3 சந்தேக நபர்களையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் இறுதிக்குள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.