வஸீம் தாஜுடீன் கொலை குறித்து நெருக்கமாக பழகிய இளம் பெண்ணிடம் விசாரணை

மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட பிரபல றகர் வீரர் வஸீம் தாஜுடீனின் கொலை தொடர்பில் விசாரணை மேற்கொள்கின்ற குற்றப் புலனாய்வு பிரிவு, தாஜுடீனுடன் நெருக்கமாக பழகிய இளம் பெண்ணிடம் விரைவில் விசாரணை மேற்கொள்ளவுள்ளது.

எதிர்வரும் ஒரு சில நாட்களுக்குள் அவரை குற்றப் புலனாய்வு பிரிவிற்கு அழைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக குற்றப் புலனாய்வு பிரிவு தகவல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளது.

இம்மர்மமான கொலை தொடர்பில் விசாரணை மேற்கொள்கின்ற குற்றப் புலனாய்வு பிரிவு, பிரபல அரசியல்வாதியின் மகன் மூலம் மேற்கொள்ளப்பட்ட மைதான கொடுக்கல் வாங்கல்களுக்கு எதிர்ப்பு வெளியிட்டமையினால் தாஜுடீனின் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவு அவதானம் செலுத்தி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(riz)