வஸீம் தாஜுதீனின் உடற்பாகங்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் SAITM சுற்றிவளைப்பு.

பிரபல றக்பி விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீனின் உடற்பாகங்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில், தொழில்நுட்ப மற்றும் மருத்துவ தெற்காசிய நிறுவனத்தில் (SAITM) சற்று முன்னர் குற்றப்புலனாய்வு பிரிவினர் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நிறுவனத்தில் தேடுதல் பணியை முன்னெடுப்பதற்கான உத்தரவை, நீதிமன்றம் மூலம் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.