குருணாகல் மாவட்ட முன்னணி வேட்பாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக செயற்பட்ட காலகட்டத்தில் அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவினால் நடத்திச் செல்லப்பட்ட “சிரிலிய சவிய” அமைப்பிற்கு சொந்தமான வாகனம் இரகசிய புலனாய்வுப் காவல்துறை பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த வாகனமானது றகர் வீரர் வஸீம் தாஜுதீனினை கொலை செய்வதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதற்கமைய வஸீம் தாஜூதீனின் கொலையில் ஷிராந்தி ராஜபக்ஷவின் ‘சிரிலிய’ நிறுவனத்துக்கு தொடர்பிருக்கலாம் என்ற வகையில் புதிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இக்கொலை தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்வதற்காக எதிர்வரும் 10ம் திகதி தாஜுடீனின் உடல் தோண்டப்படவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
(riz)