பிரபல றகர் விளையாட்டு வீரர் வஸீம் தாஜூதீனின் கொலையின், முக்கிய சாட்சியாளருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவினர், விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் சட்டமா அதிபர் திணைக்களம், இன்று(1௦) புதன்கிழமை அறிவித்தது.
இது தொடர்பான பூரண விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதன் பின்னர், சந்தேகநபர்களை கைது செய்யுமாறு குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்கு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த கொலை தொடர்பான வழக்கு, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(riz)