வாகனங்களின் விலைகள் அதிகரிக்க நேரிடும்…

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியடைவதால், வாகன இறக்குமதியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைவதனால், வாகன இறக்குமதியின் போது, மேலதிகமாக 3 லட்சம் ரூபா செலுத்த வேண்டியுள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் உத்தேச பாதீட்டில் வாகனங்கள் தொடர்பில் வரி விதிக்கப்படாவிட்டால், தற்போதைய நிலைமைக்கு அமைய வாகனங்களின் விலைகளை அதிகரிக்க நேரிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.