வாகன அனுமதிக்கு மாற்றீடாக அரசு ஒரு மில்லியன் ரூபா வழங்க தீர்மானம்

அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட தீர்வை வரி அற்ற முறையிலான வாகன கொள்வனவிற்கு பதிலாக ஒரு மில்லியன் ரூபாவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான திருத்தம் பாராளுமன்றத்தில் இன்று (01) அல்லது நாளை (02) நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நாளை நடைபெறவுள்ளது.

இன்னும், அன்றைய தினம் ஆளும் கட்சியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களை பிற்பகல் 3 மணிக்கு முன்னர் பாராளுமன்றத்திற்கு பிரசன்னமாகுமாறு சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல அறிவித்துள்ளார்.