மலையகத்தில் நுவரெலியா, ஹற்றன் மற்றும் பதுளை ஆகிய பகுதிகளில் இன்று(20) பனிமூட்டமான காலநிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் குறித்த பாதையினூடாக பயணிக்கும் சாரதிகள் எச்சரிக்கையுடனும், அவதானத்துடனும் வாகனங்களை செலுத்துமாறு வாகன சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பனி பொழிவிற்கு மாறாக மழையும் பெய்து வருகின்ற இந்நிலையில், வீதிகள் வழுக்கும் நிலையில் காணப்படுவதால் வேகத்தை குறைத்து பயணிக்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளது.